தமிழ்த்துறை
About The Department
பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் 2000ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறையானது எழுச்சியோடு செயல்பட்டு வருகிறது. முனைவர் பட்டம் பெற்ற எட்டுப் பேராசிரியர்களோடு இயங்கிவரும் இத்துறை பல்வேறு நிலைகளில் தமிழ் சார்ந்த பணிகளின் மூலம் கல்லூரியின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது.
ஆண்டு தோறும் பல்கலைக்கழகத் தேர்வில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சியடைய செய்வது இத்துறையின் சிறப்பு அம்சமாகும்
2007ஆம் ஆண்டு ‘தமிழ்ப் புதுக்கவிதைகளின் பன்முகப் பரிமாணங்கள்’ என்ற தலைப்பிலும், 2013 ஆம் ஆண்டு ‘தமிழ் வளர்ச்சியில் இலக்கியங்களின் பங்கு’ என்ற தலைப்பிலும், 2015ஆம் ஆண்டு ‘ பன்முகநோக்கில் திருக்குறள்’ என்ற தலைப்பிலும் இதுவரை மூன்று தேசியக் கருத்தரங்குகள் இத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு ஆய்வுக் கோவைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
‘பாரத் தமிழ் மன்றம்’ என்ற அமைப்பின் வழி பல தமிழ் சான்றோர்களை கல்லூரிக்கு அழைத்து அவர்களை சிறப்பிப்பதோடு இல்லாமல் இலக்கிய மன்ற விழா, கலை விழா, கருத்தரங்குகள் போன்றவற்றை நிகழ்த்தி மாணவர்களை பயனடையச் செய்கின்றது.
ஆண்டு தோறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ்ச் சார்ந்த உணர்வை மேம்படுத்தும் விதமாக மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி, பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது.
‘நிலா முற்றம்’, ‘சூரிய முற்றம்’ போன்ற தொடர் கவிதை நிகழ்ச்சியை நிகழ்த்தி வந்தபோதும், ‘பாரத கவிப்பூஞ்சோலை’ என்ற கவியரங்கம் 6.02.2014-ல் தொடங்கப்பட்டு தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்று வருகின்றது.
Eligibility
A pass in HSC